search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் கோவில் முன்பு திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதி
    X
    திருப்பரங்குன்றம் கோவில் முன்பு திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதி

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் திருமணம்- முகூர்த்த நாளான இன்று பக்தர்கள் குவிந்தனர்

    ஊரடங்கு காரணமாக திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் வந்து திருமணம் செய்வதை சமீபகாலமாக வழக்கமாக கொண்டுள்ளனர்.
    திருப்பரங்குன்றம்:

    ஊரடங்கு காரணமாக தற்போது கோவில்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் அடைக்கப்பட்டு உள்ளன. அதே சமயத்தில் அனைத்து கோவில்களிலும் பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

    பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஊரடங்கு காலத்தில் கோவில் பூட்டி இருந்தாலும் பக்தர்கள் கோவில் முன்பு சாமி கும்பிட்டு செல்கின்றனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு எனும் சிறப்பு பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருப்பரங்குன்றம், முருகனின் திருமணத்தலம் என்பதால் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் வந்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே திருப்பரங்குன்றத்தில் நூற்றுக்கணக்கான திருமண மண்டபங்கள் அமைந்துள்ளது.

    ஊரடங்கு காரணமாக திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் வந்து திருமணம் செய்வதை சமீபகாலமாக வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த தினத்தை யொட்டி பக்தர்கள் தங்களது மகன், மகளுக்கு திருப்பரங்குன்றம்கோவில் வாசலில் முன்பு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

    மணமக்கள் தாலி கட்டி, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். சுபமுகூர்த்த தினத்தை யொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவில் வாசலில் குவியத் தொடங்கினர். இதை யடுத்து கோவில் வாசலில் இருந்த போலீசார் திருமணம் செய்ய வந்த மக்களை சமூக இடைவெளியுடன் நிற்கச் செய்து ஒவ்வொரு குழுக்களாக வந்து திருமணம் செய்ய அனுமதித்தனர். இதனால் கோவில் முன்பு கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் தமிழகத்தின் முக்கிய கோவில்கள் முன்பும் ஏராளமான திருமணங்கள் நடந்தன.



    Next Story
    ×