search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

    விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அதே வாலிபரா? அல்லது வேறு யாரேனும் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்  வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது.

    இதற்கு முன்னதாக நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விஜய் என பல சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. முதல்வர் வீட்டுக்கும் மிரட்டல் வந்துள்ளது. சோதனையில் அது புரளி என தெரியவரும். இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகி வந்த நிலையில், இதன் பின்னணியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞர் இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், அவரை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில், விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அதே வாலிபரா? அல்லது வேறு யாரேனும் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×