search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரிப்பு

    தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்து வரும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 320 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்துள்ளது.

    தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்து வரும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சில்லரை வியாபாரிகள், காய்கறி மற்றும் மளிகை கடைக்காரர்கள் கோயம்பேடு மார்கெட்டில் வழக்கம் போல் வாகனங்களில் குவிந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக நள்ளிரவு முதல் காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் தவிர்த்து பெரும்பாலான காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பின்ஸ் விலை தொடர்ந்து அதிகரித்து கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

    இன்றைய காய்கறி மொத்த விலை விபரம் வருமாறு:-

    தக்காளி-ரூ.6

    வெங்காயம்-ரூ.22

    சின்ன வெங்காயம்-ரூ.60

    உருளைக்கிழங்கு-ரூ.16

    கத்திரிக்காய்-ரூ.15

    வெண்டைக்காய்-ரூ.25

    அவரைக்காய்-ரூ.50

    பீன்ஸ்-ரூ.70

    ஊட்டி கேரட்-ரூ.25

    கேரட்-ரூ.15

    பீட்ரூட்-15

    முருங்கைக்காய்-ரூ.50

    கோவக்காய்-ரூ.15

    பாகற்காய்-ரூ.30

    முட்டைகோஸ்-ரூ.4

    வெள்ளரிக்காய்-ரூ.20

    புடலங்காய்-ரூ.10

    காலி பிளவர் ஒன்று-ரூ.20

    இஞ்சி-ரூ.27

    பச்சை மிளகாய்-ரூ.25

    தேங்காய்-ரூ.32

    Next Story
    ×