search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 118 பேர் பாதிக்கப்பட்டனர். இது வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 17 ஆயிரத்து 957 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதிக இறப்பை பார்த்து அச்சமடைந்து தற்போது மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தடுப்பூசி தீர்ந்துவிட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, உயிர்ப்பலி எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முடியும். ஆகவே அரசின் வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

    தற்போது 1,500 கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. அரசின் ஒதுக்கீடு விரைவில் வர உள்ளது. அந்த ஊசிகள் வந்த பின்னர் தடுப்பூசி போடும் பணி முழுமையாக நடைபெறும். பிற மாவட்ட கலெக்டரிடமும் தடுப்பூசி கேட்கப்பட்டுள்ளது.

    மக்களிடம் தற்போது தடுப்பூசி போட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணம் அதிகரித்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலை வர வேண்டும். அதற்கேற்ப ஒதுக்கீடு கேட்டு பெற்று அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 118 பேர் பாதிக்கப்பட்டனர். இது வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 17 ஆயிரத்து 957 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    நேற்று சிகிச்சை முடிந்து 211 பேர் வீடு திரும்பினர். இதுவரை 14 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2 ஆயிரத்து 840 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 277 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

    Next Story
    ×