search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை
    X
    பாபநாசம் அணை

    தென்மேற்கு பருவமழை தொடங்கியது- அடவிநயினார், குண்டாறு அணை பகுதியில் மழை

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களிலும் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலும் விவசாய பணிகள் நடந்து வருகிறது.
    நெல்லை:

    கேரள மாநிலத்தில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதைத்தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 1 மில்லிமீட்டர் மழையும் பெய்தது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது.

    குற்றாலத்திலும் நேற்று சாரலுடன் தென்றால் காற்று வீசியது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், குளிப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 715 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1,403 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை அணை நீர்மட்டம் 135.25 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.75 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 58 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 475 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இன்று காலை அணை நீர்மட்டம் 88.75 அடியாக உள்ளது.

    குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 83.50 அடியாக உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களிலும் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலும் விவசாய பணிகள் நடந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கார்சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×