என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  என்று தணியும் கொரோனா பாதிப்பு... ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 30-ந்தேதி வரை ஒரு லட்சத்து 7ஆயிரத்து 987 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
  ராமநாதபுரம்:

  கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் இருத்தல், கை கழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றினாலும் கொரோனா தடுப்பூசி போடுவதுதான் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்கு வழியாகும்.

  அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 30-ந்தேதி வரை ஒரு லட்சத்து 7ஆயிரத்து 987 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

  கடந்த 29-ந்தேதி வரை 2 லட்சத்து 98 ஆயிரத்து 605 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 318 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 16 ஆயிரத்து 498 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 12 ஆயிரத்து 941 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று சிகிச்சை முடிந்து 260 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

  தற்போது 3 ஆயிரத்து 335 பேர் சிகிச்சையில் உள்ளனர். 222 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 11 பேர் பலியாகி உள்ளனர்.

  ஆரம்ப அறிகுறிகளின் போதே பொதுமக்கள் முறையான மருத்துவம் பார்க்காமல் ஒரு வாரத்திற்கு பின்னர் நோயின் தாக்கம் அதிகரித்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு வருவது தொடர்கதையாக உள்ளது.

  இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவதில் மருத்துவத் துறையினர் மிகுந்த சவாலை எதிர்கொள்கின்றனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

  மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கொரோனாவை விரட்டியடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் எப்போது தணியும்... கொரோனாவின் பலி எண்ணிக்கையும், தொற்று எண்ணிக்கையும் என்ற கவலையுடன் பொதுமக்கள் உள்ளனர்.


  Next Story
  ×