என் மலர்

  செய்திகள்

  அம்மா உணவகம்
  X
  அம்மா உணவகம்

  கோவை மாவட்டத்தில் செயல்படும் 15 அம்மா உணவகங்களில் திமுக சார்பில் இலவச உணவு- அமைச்சர்கள் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் ஊரடங்கு காரணமாக அனைவருக்கும் இன்று முதல் திமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  மேட்டுப்பாளையம்:

  தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்குதல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோர் கோவை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோர் அன்னூர் அரசு மருத்துவமனை மற்றும் சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணியை மேற்கொண்டனர் அங்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டனர்.

  பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்று கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தனிமைப் படுத்துவதற்காக 1500 படுக்கை வசதிகளுடன் கூடிய மையங்களை திறந்து வைத்துள்ளோம்.

  அதேபோல் அன்னூர் சிறுமுகை மேட்டுப்பாளையம் காரமடை ஆகிய பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு என்னென்ன தேவையான உபகரணங்கள் தேவையான மருத்துவ வசதி குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்துள்ளோம். மருத்துவர்களும் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளார்கள். அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்கின்றோம்.

  அதுமட்டுமல்லாமல் இந்தப் பகுதியிலும் எப்படி பொள்ளாச்சி கிணத்துக்கடவு மதுக்கரை ஆகிய பகுதிகளில் கொரோனாசிகிச்சை மையங்கள் அமைத்தோமே அதேபோல் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களை தனிமைப் படுத்துவதற்காக 1500 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.

  சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு அதிக தடுப்பூசிகளை தமிழக முதலமைச்சர் தந்துள்ளார். மேலும் தடுப்பூசிகளுக்காக க்ளோபல் டெண்டர் கோரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் ஊரடங்கு காரணமாக அனைவருக்கும் இன்று முதல் திமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×