என் மலர்

  செய்திகள்

  கருப்பு பூஞ்சை பாதிப்பு
  X
  கருப்பு பூஞ்சை பாதிப்பு

  கருப்பு பூஞ்சை நோயில் இருந்து தப்பிக்க தினமும் செய்ய வேண்டிய பரிசோதனை- டாக்டர் விளக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவிட் முதலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இந்த நேரத்தில் கருப்பு பூஞ்சை எளிதில் உள்ளே நுழைகிறது. பின்னர் அது உடலில் அதிக சர்க்கரை உற்பத்தியை தூண்டுகிறது.
  திருச்சி:

  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க கருப்பு பூஞ்சை எனும் புதிய தொற்று பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்து மீளும் சர்க்கரை நோயாளிகளை கருப்பு பூஞ்சை வெகுவாக பாதிக்கிறது.

  ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அசாதாரணமாக போனால் கருப்பு பூஞ்சை தாக்குவதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். தற்போதைய நிலையில் தமிழகத்தில் 200 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி தஞ்சாவூர் மீனாட்சி ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் குருசங்கர் கூறியதாவது:-

  கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்ட சர்க்கரை நோயாளிகளை அந்த பாதிப்பில் இருந்து மீட்பது கடினமாக இருக்கிறது. அதில் இருந்து மீண்ட பின்னர் 6 மாதத்துக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைந்தபட்சம் தினமும் 3 வேளையாவது பரிசோதித்து பார்க்க வேண்டும். அதில் ஏதாவது மாறுபாடு இருந்தால் உடனே டாக்டர்களை அணுக வேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால் கருப்பு பூஞ்சை தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள முடியும் என்றார்.

  கொரோனா வைரஸ்

  மேலும் அவர் கூறும்போது, கோவிட் முதலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இந்த நேரத்தில் கருப்பு பூஞ்சை எளிதில் உள்ளே நுழைகிறது. பின்னர் அது உடலில் அதிக சர்க்கரை உற்பத்தியை தூண்டுகிறது. பூஞ்சையின் முக்கிய ஊட்டச்சத்துகள் தொற்று பரவுவதை எளிதாக்கி விடுகிறது.

  கொரோனா சிகிச்சையின்போது வாய் வழியாக ஊக்க மருந்துகளை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்துவதில் ஒரு பங்கினை ஆற்றுகிறது.

  கொரோனாவில் இருந்து முழுவதுமாக விடுதலை ஆகிய 2 முதல் 10 நாட்களுக்குள் ஒருபக்க கன்னத்தில் வலி, மூக்கடைப்பு, கண் இமைகள் வீங்குதல் போன்றவை இருந்தால் அது கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கும். நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் கருப்பு பூஞ்சையில் இருந்து மக்களை காக்க அதிக அளவில் மருந்துகளை வழங்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×