search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1307 கன அடியாக சரிவு

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரியில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 1,458 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1307 கன அடியானது.

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரியில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 97.65 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 97.58 அடியானது.

    Next Story
    ×