என் மலர்

  செய்திகள்

  பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் சீறிப்பாய்ந்து வருவதை காணலாம்.
  X
  பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் சீறிப்பாய்ந்து வருவதை காணலாம்.

  பேச்சிப்பாறை அணையில் இருந்து 11,300 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோதையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியை மூழ்கடித்து வெள்ளம் கொட்டி வருகிறது.
  நாகர்கோவில்:

  குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. மலையோர பகுதிகளிலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் நேற்று மதியத்திற்கு பிறகு கனமழை பெய்தது. விடிய விடிய கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

  பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கேற்ப உபரிநீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை அணைக்கு அதிகபட்சமாக 17,320 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் படிப்படியாக தண்ணீரின் வரத்து குறையத் தொடங்கியது. தற்போது 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

  பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக உள்ளது. அணையில் இருந்து 11,300 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் காரணமாக குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதி களில் வெள்ளம் புகுந்தது.

  திற்பரப்பு அருவி

  கோதையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியை மூழ்கடித்து வெள்ளம் கொட்டி வருகிறது.

  77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 71 அடியாக இருந்தது. அணைக்கு 3,409 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் இன்று மதியம் 72 அடியை எட்டியது.

  இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

  மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது. அணை இன்று காலை முழு கொள்ளவை 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

  சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகளும் நிரம்பியது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகளின் நீர்மட்டம் 16.50 அடியாக உள்ளது. சிற்றாறு-1 அணையில் இருந்து 794 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

  நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 20 அடியை எட்டி உள்ளது.

  Next Story
  ×