search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள்
    X
    லாரிகள்

    தமிழகம் முழுவதும் ஊரடங்கால் 75 சதவீத லாரிகள் நிறுத்தம்

    கடந்த 8 நாட்களில் சுமார் ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் 7 லட்சம் டிரைவர், கிளீனர் உள்பட மொத்தம் 14 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
    நாமக்கல்:

    தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

    தமிழக அரசு சரக்கு வாகனங்களை தடையின்றி இயக்கலாம் என அறிவித்து இருந்தாலும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் போதிய லோடு கிடைப்பது இல்லை. இதனால் தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 4½ லட்சம் லாரிகளில் 25 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 75 சதவீத லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.

    இதனால் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.70 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 8 நாட்களில் சுமார் ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் 7 லட்சம் டிரைவர், கிளீனர் உள்பட மொத்தம் 14 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    டீசல்

    மேலும் லாரி தொழிலை பாதுகாக்க நலவாரியம் அமைக்க வேண்டும். லாரி உரிமையாளர்களை பாதுகாக்க 6 மாத காலத்திற்கு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும். தேர்தலின்போது அறிவித்தபடி டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைக்க வேண்டும். இதுபோன்ற சலுகைகளை லாரி உரிமையாளர்களுக்கு வழங்கினால் மட்டுமே இந்த தொழிலை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×