search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ஊர் பஞ்சாயத்தில் முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்- 50 பேர் மீது வழக்கு பதிவு

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டந்தல் கிராம பஞ்சாயத்தில் 3 பேரை காலில் விழ செய்தது தொடர்பாக 8 பேர் மீது வழக்குபதிவு செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டந்தல் கிராமத்தில் 2 பகுதிகளாக குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு சமூகத்தினர் ஒரு பகுதியிலும், பிற சமூகத்தினர் மற்றொரு பகுதியிலும் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று ஒரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கொரோனா பொதுமுடக்க காலத்தில் தடையை மீறி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்ததை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். திருவிழா நடைபெற்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தங்களுக்கு தகவல் தெரிவித்தவர் குறித்து போலீசார் விழா அமைப்பாளர்களிடம் கூறியதாக தெரிகிறது.

    இதனால் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற ஊர்பஞ்சாயத்தில் கோவில் திருவிழா ஏற்பாட்டாளர்களான 3 பேரை மற்றொரு தரப்பினர் காலில் விழவைத்து அவமதித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதா கிருஷ்ணன் ஆகியோர் ஒட்டந்தல் கிராமத்திற்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து இருதரப்பினர் மீதும் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    3 பேரை காலில் விழ செய்தது தொடர்பாக 8 பேர் மீது வழக்குபதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். திருவிழா நடத்தியவர்கள் 50 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

    Next Story
    ×