search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரமற்ற ரேசன் அரிசி வழங்குவதாக புகார் தெரிவித்துள்ள மக்கள்.
    X
    தரமற்ற ரேசன் அரிசி வழங்குவதாக புகார் தெரிவித்துள்ள மக்கள்.

    தரமற்ற ரேசன் அரிசியை வாங்காமல் பட்டினி கிடக்கும் கிராம மக்கள்

    கடமலைக்குண்டு அருகே தரமற்ற ரேசன் அரிசியை வாங்க மறுத்து கிராம மக்கள் பட்டினியில் தவித்து வருகின்றனர்.
    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் பழங்குடியினர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அனைத்து குடும்பங்களுக்கும் அரசின் ரே‌ஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரட்டுப்பட்டி உள்ள ரே‌ஷன் கடைகளில் பழங்குடியினர் சிலருக்கு அரிசி வழங்கப்பட்டது. ஆனால் அந்த அரிசி சமைத்து உண்ண முடியாத அளவு மிகவும் தரமற்ற நிலையில் உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வருமானம் இல்லாமல் ரே‌ஷன் கடைகளை சார்ந்தே குடும்பம் நடத்தி வரும் சூழ்நிலையில் இதுபோன்ற தரமற்ற அரிசி வழங்கப்படுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

    தரமற்ற ரேசன் அரிசி

    மேலும் தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் வீட்டில் குழந்தைகள் பட்டினியில் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பழங்குடியினர் அனைவரும் மீண்டும் மலைகளில் குடியேறும் மனநிலையில் உள்ளனர். இது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



    Next Story
    ×