search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருப்பூரில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா- தடுப்பு பணிகள் தீவிரம்

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிய உச்சமாக மாவட்டத்தில் ஒரே நாளில் 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் கோவை, திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்த வர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 861ஆக உயர்ந்து ள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 95 பேர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர். தற் போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 246ஆக உயர்ந்து ள்ளது. இந்தநிலையில் திருப் பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பொது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு 600ஐ கடந்தது இதுவே திருப்பூரில் முதல் முறையாகும். இதனிடையே திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 7 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வந்துள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    பலரும் தடுப்பூசி செலுத்தியதால் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது 7 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டு திருப்பூருக்கு வந்துள்ளது. அந்த தடுப்பூசிகள் மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சுகாதாரத்துறை மூலம் கோவிஷீல்டு 4 ஆயிரம் டோஸ் மற்றும் கோவேக்சின் 3 ஆயிரம் டோஸ் திருப்பூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இந்த தடுப்பூசி முடியும் தருவாயில் கூடுதலாக கேட்டு பெறப்படும். அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் என்றனர்.

    Next Story
    ×