search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திருப்பூருக்கு 13,920 தடுப்பூசிகள் ஒதுக்கீடு- நாளை முதல் மீண்டும் போடப்படுகிறது

    நாளை முதல் மீண்டும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடும் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த 46 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. அதில் 13,920 தடுப்பூசிகள் திருப்பூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தடுப்பூசிகள் இன்று திருப்பூருக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன் பின்னர் நாளை முதல் மீண்டும் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×