search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36 ஆயிரத்து 48-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாத இறுதியில் ஏற்றதாழ்வுடன் இருந்து வந்தது.

    அதன்பின் விலை உயர்ந்தபடி இருந்ததால் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே நேற்று பவுனுக்கு ரூ.384 குறைந்து ரூ.35 ஆயிரத்து 576-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.472 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 48-க்கு விற்றது.

    கிராமுக்கு ரூ.59 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 506 ஆக உள்ளது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்தது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.73 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கு விற்றது.

    கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    இதையடுத்து தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் விலை தொடர்ந்து உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது.

    அதன் பின் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தங்கம் விலை குறைந்து வந்தது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதின் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்தை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×