search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுர வீதி
    X
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுர வீதி

    இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய மதுரை

    கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கால் மதுரை வெறிச்சோடியது. இதனையொட்டி விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
    மதுரை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனைத்தொடர்ந்து தமிழக அரசு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கினை அறிவித்துள்ளது. எனவே இந்த நேரத்தில் தனியார், அரசு பஸ் போக்குவரத்து, வாடகை ஆட்டோ, கார் மற்றும் தனியார் வாகன பயன்பாடு அனுமதிக்கப்படாது.

    இருப்பினும் ரெயில், விமான நிலையம் செல்ல மட்டும் வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதே போல் சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் எந்த தடையுமின்றி செல்லலாம்.

    இந்த நள்ளிரவு ஊரடங்கு நேற்று இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி மதுரை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு மூடப்பட்டன. போலீசார் ரோந்து வாகனம் மூலம் சென்று கடைகளை 9 மணிக்கு அடைக்க வேண்டும் என்று எச்சரித்தப்படி சென்றனர். அதன்பின் சாலையில் சென்றவர்களையும் 10 மணிக்கு மேல் வெளியில் நடமாட கூடாது என்று எச்சரித்தப்படி இருந்தனர்.

    மேலும் முக்கிய சாலைகளில் எல்லாம் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி கண்காணிக்கும் பணியினை மேற்கொண்டனர். இரவு 10 மணிக்கு மேல் சாலைகளில் சென்றவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அதேவேளையில் வழக்கம் போல் சரக்கு போக்குவரத்து இருந்தது. கீழமாசி வீதிகளை சுற்றி சரக்கு வாகன போக்குவரத்து இருந்தது.

    ஆனால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. காலை 4 மணிக்கு மேல் அங்குள்ள கடைகளில் சரக்குகளை இறக்குவதற்காக வாகனம் காத்து இருந்தன. அதேபோல் புறநகரிலும் வாகன போக்குவரத்து இல்லாமல் நெடுஞ்சாலைகள், சாலைகள் என அனைத்தும் வெறிச்சோடி இருந்தன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் மதுரை-திருச்சி, மதுரை-திண்டுக்கல் நான்குவழிச்சாலைகளில் சரக்கு வாகனங்கள் தவிர எந்த வாகனமும் செல்லவில்லை.

    விருதுநகர் பழைய பஸ் நிலையம்

    ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் நேற்று இரவு 9 மணிக்கு பின்னர் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்ததும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவு ஊரடங்கையொட்டி அரசு விதித்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தடையை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    Next Story
    ×