search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் நூற்பாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளிகள்

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அவர்கள் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 516ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி இதுவரை 231 பேர் பலியாகியுள்ளனர்.

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் மாவட்டத்திற்குட்பட்ட வெள்ளக்கோவில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் நூற்பாலை மூடப்பட்டு நோய்க் கட்டுப்பாட்டுப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்கியிருந்த நூற்பாலை குடியிருப்புகளிலேயே கொரோனா நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நூற்பாலை நிர்வாகம் தங்களை சரியாக பராமரிக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை, பணமும் இல்லை என தொழிலாளர்கள் புகார் கூறி வந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் நூற்பாலையில் இருந்து தப்பியோடி விட்டனர்.

    அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்புள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோயாளிகள் தப்பியோடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×