search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ள காட்சி
    X
    வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ள காட்சி

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை

    மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 43 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஓமலூர் 31, சங்ககிரி 25, கரியகோவில் 17, பெத்தநாயக்கன்பாளையம் 6, ஏற்காடு 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 124 மி.மீ. மழை பெய்துள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று எடப்பாடி, ஓமலூர் சங்ககிரி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது.

    2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய இந்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழையால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளான பூலாம்பட்டி, மொரசப்பட்டி, வெள்ளரிவெள்ளி, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்துவந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்துவருகிறது. நேற்று இரவு சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால், எடப்பாடி சுற்றுப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    சில இடங்களில் சிறிய அளவிலான பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் தேக்கியதால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே பயணித்தனர். வெள்ளி வெள்ளி மற்றும் மொரசப்பட்டி பகுதியில் உள்ள கசிவுநீர்குட்டைகள் நிரம்பின மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய வயல்களில் மழைநீர் பெருமளவில் தேங்கி நின்றது.

    எடப்பாடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை, விவசாயப்பணிகளுக்கு சாதகமாக சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் கோடைஉழவு செய்திட ஆயத்தமாகி வருகின்றனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பாடியில் 43 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஓமலூர் 31, சங்ககிரி 25, கரியகோவில் 17, பெத்தநாயக்கன்பாளையம் 6, ஏற்காடு 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 124 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லி மலை உள்பட பல பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குமாரபாளையத்தில் 28.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நாமக்கல் 20 , சேந்தமங்கலம் 24, திருச்செங்கேடு 5, கொல்லி மலை 12, ராசிபுரம் 1.2 என மாவட்டம் முழுவதும் 98.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.



    Next Story
    ×