search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை குறைப்பு
    X
    விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை குறைப்பு

    கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை குறைப்பு

    சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை குறைக்கப்பட்டது.
    நாகர்கோவில்:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியின் கடல் அழகை காண தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதத் தில் ஏற்பட்ட கொரோனா பிரச்சினை காரணமாக கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதுமாக முடங்கியது.

    இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை காண தினமும் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.

    ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைந்து விட்டது. தினமும் 750 பேர் முதல் 1000 பேர் வரை மட்டுமே விவேகானந்தர் மண்டபத்தைக் காண படகில் பயணம் செய்கின்றனர்.

    இதனால் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு மூன்று படகுகளுக்கு பதிலாக ஒரே ஒரு படகு மட்டுமே நேற்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. திருவள்ளுவர் சிலைக்கு முற்றிலுமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×