search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாதவர்கள் கண்காணிப்பு ரூ.500 அபராதம் வசூலிப்பு

    ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும்படி மத்திய ரெயில்வே அமைச்சகம் அனைத்து மண்டல ரெயில்வே துறைக்கும் உத்தரவிட்டது.

    சென்னை:

    கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

    ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும்படி மத்திய ரெயில்வே அமைச்சகம் அனைத்து மண்டல ரெயில்வே துறைக்கும் உத்தரவிட்டது.

    இதையடுத்து தென்னக ரெயில்வே சார்பில் அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இதையடுத்து சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களை பிடித்து ரூ.500 அபராதம் வசூலித்தனர்.

    எழும்பூர் ரெயில் நிலையத் தில் 25 டிக்கெட் பரிசோத கர்கள், மின்சார ரெயில் உள்பட 11 பிளாட்பாரங்களிலும் இன்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது முககவசம் அணியாமல் வந்த பலர் அவர்களிடம் சிக்கினார்கள். உடனே ரூ.500 அபராதம் விதித்து பணத்தை வசூலித்து விட்டு ரசீதும் கொடுத்தனர்.

    ஆனால் ரூ.5 மதிப்புள்ள ஒரு முககவசத்தை கூட இலவசமாக வழங்க ரெயில் வேதுறை முன்வரவில்லை.

    இதுபற்றி அபராதம் கட்டி புலம்பிய ஒரு பயணி கூறியதாவது:-

    முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது தவறில்லை. அணியாமல் வந்தது எனது தவறுதான். அதற்கு தண்டனையாக ரூ.500 வசூலித்துக்கொண்டார்கள். பணத்தை கொடுத்துவிட்டு முககவசம் அணியாமல்தான் ரெயில் பயணத்தையும் தொடர்கிறேன்.

    குறைந்தபட்சம் ஒருமுறை பயன்படுத்தும் ஒரு முக கவசத்தையாவது இலவசமாக தரலாமே. ரூ.500 வசூலிக்கும் ரெயில்வே ரூ.5 செலவழிக்க தயங்குவது ஏன்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.5 விலையுள்ள 10 முககவசங்கள் அடங்கிய பொட்டலம் ஒன்றை அபராதம் வசூலிப்போருக்கு கொடுத்து அனுப்பினால் கொரோனா தடுப்பு பணியில் ரெயில்வேயும் ஈடுபட்டதுபோல் இருக்கும்.

    Next Story
    ×