search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை நிலவரம்

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை கடந்த 12-ந்தேதி தாண்டியது.

    அதன்பின் மூன்று நாட்கள் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மாலை பவுனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 352-க்கு விற்றது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்றது.

    கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 452 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.73 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.73.70-க்கு விற்றது.

    கடந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தபடியே இருந்ததால் பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    அதன்பின் விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வந்த நிலையில் தற்போது விலை உயர்ந்தபடி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×