search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்து 424-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.4,428 ஆக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்றம்-இறக்கம் காணப்பட்டு வருகிறது. ரூ. 35 ஆயிரத்தை தாண்டுவதும், பின்னர் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் விலை வருவதுமாக இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ. 176 குறைந்து ரூ.34 ஆயிரத்து 864-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 424-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.4,428 ஆக உள்ளது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ. 73 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்கிறது.

    Next Story
    ×