search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வு அதிகரிப்பால் விற்பனை அதிகரித்துள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்கின்றனர்.

    தற்போது நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வு அதிகரிப்பால் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டதில், கோடை வெயில் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்து வருவதாலும், கொரோனா தொற்று பரவலால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலை உயர்ந்து வருவதாலும், இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 15 காசுகள் உயர்வுடன் ரூ. 4.75ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் 75 காசுகள் முட்டை விலை உயர்ந்துள்ளது.

    பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-

    ஆமதாபாத் ரூ.4.75, சென்னை ரூ.5.05, சித்தூர் ரூ.4.98, மும்பை ரூ.5, விஜயவாடா ரூ.4.52.
    Next Story
    ×