search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பா.ஜனதா அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா

    பாரதிய ஜனதா அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயம் சென்னை தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் ஊழியர்கள் தவிர மாநில நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் தினமும் வந்து செல்வார்கள்.

    தற்போது தேர்தல் காரணமாக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வெளியூர் சென்றுவிட்டார்கள். இந்த நிலையில் அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து முக்கியமான ஒரு சில ஊழியர்களை தவிர்த்து மற்றவர்கள் வரவில்லை. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. சமூக இடைவெளியுடன் ஊழியர்கள் அமரவும், பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×