search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லையில் ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 217 பேருக்கு தொற்று உறுதியாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    தொடர்ந்து 3 நாட்கள் 100-ஐ கடந்து வந்த பாதிப்பு நேற்று 81 ஆக குறைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 217 பேருக்கு தொற்று உறுதியாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.

    இதில் மாநகர பகுதியில் மட்டும் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாளையில் 25 பேரும், வள்ளியூரில் 20 பேரும், மானூரில் 19 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

    தினசரி பாதிப்பில் மாநகர பகுதியிலேயே 50 சதவீத தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகிறது.

    புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் தச்சநல்லூரை சேர்ந்த ஒரு டாக்டர், என்.ஜி.ஓ காலனி மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பெண் டாக்டர்கள், நெல்லை அரசு மருத்துவமனை ஊழியர், பெருமாள் புரம், வண்ணார்பேட்டை பகுதிகளை சேர்ந்த தம்பதிகள் அடங்குவர்.

    ராதாபுரம், தச்சநல்லூரில் ஒரே தெருவில் 4 பேர், கங்கை கொண்டான், மேலக்கல்லூர், திருப்பணிகரிசல்குளம் ஆகிய பகுதிகளில் ஒரே குடும்பத்தில் 3 பேர், ராமையன்பட்டி, மூலக்கரைப்பட்டியில் ஒரே குடும்பத்தில் 2 பேர், டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 போலீசார், கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த ஊழியர், மேலப்பாளையம் அரசு மருத்துவமனை ஊழியர், பாளை சிறைத்துறை குடியிருப்பில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மாநகரில் பெண் உள்பட 3 பேருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று 1,404 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இது நேற்றை விட சுமார் ஆயிரம் அதிகமாகும். இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,240 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை 16,022 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 1,001 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    Next Story
    ×