search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமீறலை கண்காணிக்க 12 குழுக்கள்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணியவும், எந்த இடத்திலும் கூட்டம் கூடாமல் அரசு அறிவித்த விதிமுறைகளின் படி நடக்கவும், கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணியவும், சமூக விலகலை கடைபிடிக்கவும், எந்த இடத்திலும் கூட்டம் கூடாமல் அரசு அறிவித்த விதிமுறைகளின் படி நடக்கவும், கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவுக்காக கூடுதல் வார்டு ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றில் காய்ச்சல் கண்டறிய சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா தொற்று நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று நோய் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலிக்க 12 குழுக்களை மாநகராட்சி ஆணையர் கண்ணன் நியமித்துள்ளார்.

    இந்த 12 குழுவினர்களும் இன்று முதல் நெல்லை மாநகராட்சி பகுதியில் பல்வேறு கடை வீதிகள், வியாபார நிறுவனங்கள், பஸ்கள் மற்றும் பொது கட்டிடங்களுக்கு சென்று அதிரடி சோதனை நடத்துவார்கள். இதில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும் அரசின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    மேலும் நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 9 நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும், சளி காய்ச்சல் என்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சந்தேகம்படும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

    விரைவில் நெல்லை மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலும் சுகாதாரத்துறையினர் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் சளி காய்ச்சல் நோய்க்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

    சுகாதாரத்துறை அதிகாரிகளும் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    சளி காய்ச்சல் என்று சிகிச்சைக்கு வருபவர்களில், சந்தேகப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது. தென்காசி மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×