search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 98 அடியாக நீடிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி நிறுத்தப்பட்டது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் அந்த மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது.

    தமிழகத்தில் டெல்டா பாசன ஆதாரமாகவும், 4½ கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து நூற்றுக்கணக்கான கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அப்போது அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 72.78 அடியாகவும் இருந்தது. குடிநீருக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் தற்போதைய நீர்மட்டம் 98 அடியாகவும், நீர் இருப்பு 63.05 டி.எம்.சி.யாகவும், நீர்வரத்து 100 கன அடிக்கும் குறைவாகவே உள்ளது.

    இதனால் இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் வருகிற ஜூன் மாதம் இறுதி வரை 10 டி.எம்.சி. தண்ணீர் வரை விடுவிக்க வேண்டும். இதனால் வருகிற ஜூன் மாதம் 53 டி.எம்.சி. வரை தண்ணீர் இருப்பில் இருக்கும். மேலும் கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கினால் அணையின் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும். இதனால் வரும் ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பதில் சிக்கல் இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×