search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    மே 2-ந்தேதி நல்ல தீர்ப்பு வரும்: விஜயகாந்த் அறிக்கை

    வாக்குகள் எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க கட்சித் தொண்டர்கள் இரவு - பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. - அ.ம.மு.க. கூட்டணி சார்பில் 234 தொகுதிகளிலும், வேட்பாளர்கள் களம் கண்டனர். இவர்களின் வெற்றிக்காக தே.மு.தி.க.வினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் இரவு - பகல் பாராமல் தீவிர களப்பணியாற்றினர்.

    மிகச்சிறந்த முறையில் பணியாற்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், வேட்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தே.மு.தி.க. சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சி பலம், பண பலம், அதிகார பலம் என அனைத்தையும் தைரியத்துடன் எதிர்கொண்டு, தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றி களம்கண்ட சிங்கங்களாக ஜனநாயக்கத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக எதையும் எதிர்பாராமல் தமிழகத்தின் எதிர்கால நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சிறப்பாக பணியாற்றி, அரும்பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

    வாக்குகள் எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க கட்சித் தொண்டர்கள் இரவு - பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந்தேதியும் எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மே 2-ந்தேதி நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×