search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்த வருவாய்.
    X
    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்த வருவாய்.

    பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாய்

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 வருவாயாக கிடைத்தது.
    பழனி:

    பழனி முருகன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. இதைத்தொடர்ந்து 56 நாட்களுக்கு பிறகு நேற்று பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நடைபெற்ற இந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 வருவாயாக கிடைத்தது.

    இதேபோல் தங்கம் 1 கிலோ (1,172 கிராம்), வெள்ளி 23½ கிலோ (23,645 கிராம்), மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 148-ம் கிடைத்தது.

    மேலும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம் மற்றும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    2-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×