search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டல் நிர்வாகம் வெளியிட்ட சலுகை அறிவிப்பு
    X
    ஓட்டல் நிர்வாகம் வெளியிட்ட சலுகை அறிவிப்பு

    வாக்களித்து விட்டு கைவிரல் மையை காட்டினால் 5 சதவீதம் தள்ளுபடி - விழிப்புணர்வில் அசத்திய ஓட்டல் நிர்வாகம்

    பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலும் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அசத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    தமிழக சட்டசபை தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்தது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்தநிலையில் பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலும் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அசத்தியுள்ளது.

    வாக்களித்து விட்டு கைவிரலில் மையுடன் சாப்பிட வரும் அனைவருக்கும் உணவு விலையில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்தது. இதேபோல ஜோடியாக வரும் தம்பதிகளுக்கு 10 சதவீதம் சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்றுமுன்தினம் வாக்களித்து விட்டு ஏராளமானோர் அந்த ஓட்டலுக்கு சென்று கைவிரலில் உள்ள மையை காட்டி விட்டு தள்ளுபடி விலையில் சாப்பிட்டனர். இந்த சலுகை நேற்றும் தொடர்ந்தது. இன்றுடன் 5 சதவீத சலுகை நிறைவடைகிறது.

    நாங்கள் இதுபோல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல சலுகைகளை அறிவித்துள்ளோம். கடந்த 2016 சட்டசபை தேர்தல் அன்று மட்டும் வாக்களித்து வருபவர்களுக்கு தள்ளுபடி வழங்கினோம். அப்போது வாக்களித்த பலர் அந்த சலுகையை பெற முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்தனர்.

    அதனால் இந்த ஆண்டு வாக்குப்பதிவு நாளில் இருந்து 3 நாட்கள் தள்ளுபடி வழங்கப்படும் என ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டோம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் வாக்களித்து விட்டு வந்து எங்கள் ஓட்டலில் சாப்பிட்டுச் சென்றனர். இதுமட்டுமல்லாமல் தென்னிந்திய பாரம்பரிய உணவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    சாப்பாட்டுக்கு மட்டுமல்லாமல் பேக்கரியில் என்ன வாங்கினாலும் 5 சதவீத தள்ளுபடி வழங்கினோம். டீ குடித்தால் கூட இந்த சலுகை பொருந்தும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×