search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூர் மாநகரில் வீடு,வீடாக காய்ச்சல் பரிசோதனை

    திருப்பூர் மாநகர் பகுதியில் தினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை நாள் ஒன்றின் பாதிப்பு 50க்கும் குறைவாக இருந்தது. தற்போது 100ஐ தாண்டி பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 1 ஆக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 735 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த 85 வயது முதியவருக்கு கடந்த 2ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 228ஆக உள்ளது.

    கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி யுள்ளதால் பொதுமக்கள் உஷாராகவும், பாது காப்பாகவும் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதனிடையே திருப்பூர் மாநகர் பகுதியில் தினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் வெப்பநிலை அதிகம் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    மேலும் மாநகரின் சில இடங்களில் பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா? என்று கண்டறியப்படுகிறது.
    Next Story
    ×