search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சேலத்தில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று- ஒரே நாளில் மேலும் 90 பேருக்கு கொரோனா

    கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் வேகமாக கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் மாநகராட்சியில் 43 பேரும், சேலம் சுகாதார மாவட்டத்தில் 32 பேரும் ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 11 பேரும், நகராட்சி பகுதிகளில் 3 பேரும் என 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 32 ஆயிரத்து 71 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 419 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே சேலம் மாவட்டத்தை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவர் கொரோனா பாதிப்பால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.

    சேலத்தில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் 500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தினமும் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×