search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காடு கோவில்பத்து வாக்குச்சாவடியில் ஓட்டு போட குவிந்த பொதுமக்கள்.
    X
    களக்காடு கோவில்பத்து வாக்குச்சாவடியில் ஓட்டு போட குவிந்த பொதுமக்கள்.

    களக்காடு வாக்குச்சாவடிகளில் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு விதிகள்

    களக்காடு கோமதி அருள் நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் அறிவித்த கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர்.

    காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பெண்கள் கூட்டமும் அலைமோதியது. களக்காடு கோமதி அருள் நெறி மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் அறிவித்த கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை.

    ஓட்டு போட வந்த வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படவில்லை. இதனால் கையுறை இல்லாமல் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.

    இதுபற்றி பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் முறையான பதில் தெரிவிக்கவில்லை.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே ஓட்டு போட வரும் பொதுமக்களுக்கு கையுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் களக்காடு வாக்குச்சாவடிகளில் அவை வழங்கப்படாதது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்தது.



    Next Story
    ×