search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லையில் தம்பதி உள்பட மேலும் 42 பேருக்கு கொரோனா

    நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இன்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 42 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்றைய எண்ணிக்கையை விட இது அதிகமாகும்.

    தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்றைய மொத்த பாதிப்பில் மாநகர பகுதியில் 6 பேரும், பாளையில் 10 பேரும், அம்பையில் 5 பேரும், ராதாபுரம், நாங்குநேரியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசியை சேர்ந்த 2 பேருக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

    மேலும் 15 பேருக்கு தனியார் ஆய்வகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் மாநகர பகுதியில் கணவன்- மனைவியும், மின் ஊழியர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவரும் அடங்குவர்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரும் இதில் அடங்குவார்.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

    ஆனால் அதன்பின்னர் நெல்லையில் பாதிப்பு உயர்ந்தது. தொடர்ந்து தினமும் இரட்டை இலக்கங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று உயர்ந்து வருவதால் கூடுதல் அறைகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15 ஆயிரத்து 725 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 216 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×