search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குக்கருடன் பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர் லாரியை காணலாம்
    X
    குக்கருடன் பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர் லாரியை காணலாம்

    உரிய ஆவணங்கள் இல்லாததால் கண்டெய்னர் லாரியுடன் குக்கர் பறிமுதல்

    குக்கருடன் கண்டெய்னர் லாரியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
    மயிலம்:

    தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம் அருகே மயிலம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி பிரகதீஷ்வரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    லாரி டிரைவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் கண்டெய்னர் லாரியை சோதனை செய்தனர். அதில் 2,380 குக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து லாரி டிரைவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஈரோட்டை சேர்ந்த விஜயகுமார் (வயது 35) என்பதும், அவர் உரிய ஆவணங்களின்றி குக்கர்களை லாரியில் எடுத்து செல்வதும் தெரியவந்தது.

    அதனைத்தொடர்ந்து குக்கருடன் கண்டெய்னர் லாரியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.


    Next Story
    ×