என் மலர்

  செய்திகள்

  பணம் பறிமுதல்
  X
  பணம் பறிமுதல்

  கொளத்தூரில் ரூ.1.92 லட்சம் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொளத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

  கொளத்தூர்:

  சென்னை கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்னுரங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

  கொளத்தூர் தணிகாசலம் நகரை சேர்ந்த ராஜ் என்பவர் அம்பத்தூர் பெட்ரோல் பங்கிலிருந்து இந்த பணத்தை கொண்டு செல்வதாக விசாரணையில் தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை பெரம்பூர் தாசில்தார் முன்னிலையில் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

  Next Story
  ×