search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    இறுதி நாளான ஏப்ரல் 4-ந் தேதி இரவு 7 மணிவரை பிரசாரம் செய்யலாம்: தேர்தல் ஆணையம் அனுமதி

    ஒவ்வொரு தேர்தலிலும் இறுதி நாளன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் கூடுதலாக 2 மணிநேரம் பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு வருகிற (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரசாரம் 4-ந் தேதி மாலையுடன் முடிவடைகிறது.

    ஒவ்வொரு தேர்தலிலும் இறுதி நாளன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் ஏப்ரல் 4-ந் தேதியன்று இரவு 7 மணிவரை பிரசாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

     

    சத்யபிரத சாகு

    இதன் மூலம் கூடுதலாக 2 மணிநேரம் பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு குறித்து மாவட்ட தேர்தல் அலுவல ரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×