search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேச்சிப்பாறை அணை
    X
    பேச்சிப்பாறை அணை

    பெருஞ்சாணி அணையை தொடர்ந்து பேச்சிப்பாறை அணை மூடல்

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று கொட்டாரம், மயிலாடி பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு வெயில் கொளுத்தியது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் நாகர்கோவிலில் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 7.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டர்வருமாறு:-

    நாகர்கோவில்-2, பேச்சிப்பாறை-3, புத்தனை -2, பாலமோர்-1.4, மாம்பழத்துறையாறு -7.2, ஆரல்வாய்மொழி-1, குருந்தன்கோடு-5.4, ஆனைக்கிடங்கு-6.2.

    ஏற்கனவே கும்பப்பூ சாகுபடிக்காக திறக்கப்பட்ட பெருஞ்சாணி அணை கடந்த வாரம் மூடப்பட்டது. இந்த நிலையில் பேச்சிப்பாறை அணை நேற்று மாலை மூடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 52.32அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 20கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 5.58 அடியாக இருந்தது. சிற்றார்-2 அணை நீர்மட்டம் 5.67 அடியாக உள்ளது. பொய்கை அணை நீர்மட்டம் 18. 90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 14.76 அடியாக உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 10.30 அடியாக உள்ளது.
    Next Story
    ×