search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா

    தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தஞ்சை அடுத்த அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இதைதொடர்ந்து படிப்படியாக மற்ற பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவி வந்தது. நேற்று வரை 13 பள்ளிகள், 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 205 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    இதற்கிடையே மாணவர்கள் மத்தியில் கொரோனா பரவி வருவதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முகாம்கள் அமைத்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பரிசோதனை முடிவுகள் வந்த வண்ணம் உள்ளது.

    இன்று காலை வந்த முடிவுகளில் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை கல்லூரியில் புதிதாக 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இக்கல்லூரி மாணவர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்லூரி 4ஆக உயர்ந்தது. இதுவரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என 225 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×