search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமியுடன் புதுவை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

    சேலம் மாவட்ட அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆசி பெற்றனர்.
    சேலம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஓமலூர் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நட்சத்தினார். பின்னர் இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்தார்.

    புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 14 தொகுதிகளை அ.தி.மு.க., பா.ஜ.க. பிரித்துக்கொள்வது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. இதில் இன்னும் உடன்பாடு எட்டவில்லை. இதனால் அ.தி.மு.க., பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அசனா, அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேற்று சேலம் வந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்- அமைச்சரின் இல்லத்துக்கு சென்ற அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் சூரமங்கலத்தில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சாமி கோவிலில் பிரகாரத்தை வலம் வந்து கையில் வைத்திருந்த பேப்பரை சாமி விக்ரகத்தில் வைத்து வழிபட்டு சென்றனர். இதேபோல் சேலம் மாவட்ட அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆசி பெற்றனர்.
    Next Story
    ×