search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியாக சரிந்தது

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 102.93 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 102.83 அடியாக சரிந்தது.
    மேட்டூர்

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 172 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது. இன்று கொஞ்சம் அதிகரித்து விநாடிக்கு 183 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கெண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 102.93 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 102.83 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.
    Next Story
    ×