search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    டி.ஜி.பி. மீதான பாலியல் புகார்: பெண் போலீஸ் சூப்பிரண்டு விசாரணையை தொடங்கினார்

    டி.ஜி.பி. மீது பாலியல் புகார் கூறிய பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி முடிவு செய்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காவல்துறையில் டி.ஜி.பி. அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த பாலியல் புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    இந்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி.யே நேரடியாக கண்காணிப்பார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்த விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று அரியலூரில் விசாரணையை தொடங்கினார். புகார் கூறிய பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற அவர் முடிவு செய்துள்ளார்.

    அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணைக்காக தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வைத்துதான் சூப்பிரண்டு முத்தரசி விசாரணை நடத்தி வருகிறார். பாலியல் புகார் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    Next Story
    ×