search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல்

    காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    கன்னியாகுமரி:

    தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதி நிறைவடைகிறது. இதேபோல, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலமும் மே-ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு சட்டசபை காலியாக உள்ளது.

    இதையடுத்து, இந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை அறிவித்தார். அப்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.

    மேலும், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    Next Story
    ×