search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    விருதுநகரில் போக்குவரத்து பணிமனை-அரசுத்துறை கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

    விருதுநகர் மாவட்டத்தில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனையை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    சென்னை:

    தமிழக வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மைப் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 10 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும், திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் 78 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள உணவுப் பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார்.

    வணிகவரித் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் 1 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார்.

    ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை கிராமத்தில் 14 கோடியே 30 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

    மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் 98 கோடியே 93 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, திருப்பூர் மாவட்டம் வேளம்பாளையம், சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கண்டியபேரி ஆகிய இடங்களிலுள்ள 4 இரண்டாம் நிலை அரசு மருத்துவமனைகளுக்கு, 109 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்துறையின் கீழ் இயங்கும் பட்டு வளர்ச்சித் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பல்நிலை குளிர்பதன அலகு மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விற்பனை நிலையம், தொழிற்கூடம் மற்றும் சுற்றுசுவருடன் கூடிய தேன்பொத்தை மற்றும் இலஞ்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்க தொழிற்கூடங்கள் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை சார்பில் 29 கோடியே 94 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்து, சென்னை, அண்ணா நகரில் 17 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள தொழிலாளர் ஆணையரக வளாகத்திற்கு தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் 4 கோடியே 71 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடங்கள், பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடம், தொழிற்பயிற்சி மையக் கட்டிடம் மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும், 21 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநல ஆணையரக அலுவலகக் கட்டிடம் மற்றும் 2 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடங்களுக்கு தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 5 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை ஆகியவற்றை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

    Next Story
    ×