search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 62 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி: முதலமைச்சர்

    உடல் நலக்குறைவு, விபத்தில் உயிரிழந்த 62 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் பாஸ்கர், பெரிபெரல் மருத்துவமனை சிறப்பு உதவி ஆய்வாளர் சிவராஜ், ஆவடி தலைமைக் காவலர் ஆ.பிரபாகரன்.

    கோயம்பேடு தலைமைக் காவலர் நரேந்திரகுமார், ராஜமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்ணன்.

    புழல் உதவி ஆய்வாளர் ராம்சிங், ராயப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் சபரிநாதன், அமைந்தகரை உதவி ஆய்வாளர் கா.வைகை மாறன்.

    அமைந்தகரை போக்குவரத்து தலைமைக் காவலர் பழனி, கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், பாதுகாப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு, பெரியமேடு உதவி ஆய்வாளர் தா. தேவன்.

    தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் விஜய், பெரியநாயக்கன்பாளையம் உதவி ஆய்வாளர் கணேசன், கடலூர் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் கஸ்பர், தருமபுரி தலைமைக் காவலர் க. குமரன்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தலைமைக் காவலர் அங்கமுத்து, கொடைக்கானல் உதவி ஆய்வாளர் ஸ்ரீராம் ரஞ்சித் பாபு, கொடைக்கானல் முதல் நிலைக் காவலர் ஜெயசீலன், திண்டுக்கல் மகளிர் காவல் நிலைய காவலர் அன்னை இந்திரா, மாவட்ட கட்டுப்பாட்டு அறை தலைமைக் காவலர் மணிகண்டன்.

    ஈரோடு வடக்கு போக்குவரத்து முதல் நிலைக் காவலர் ஜெகதீசன், தலைமைக் காவலர் ஸ்ரீதரன், மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் லி.பிரவீன் குமார், தல்லாக்குளம் தலைமைக் காவலர் பழனிவேல் நாதன்.

    உசிலம்பட்டி பெண் தலைமைக் காவலர் பூங்கா, திருமங்கலம் தலைமைக் காவலர் பூலோக சுந்தர்.

    நீலகிரி தலைமைக் காவலர் விஜயகுமார், பனையப்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் ரெங்கன், திருப்புல்லாணி உதவி ஆய்வாளர் வாசுதேவன், திருவாடானை உதவி ஆய்வாளர் ஆனந்தன், தலைமைக் காவலர் ஆ. முருகேசன். வாழப்பந்தல் தலைமைக் காவலர் பி. வசந்தகுமார்.

    சேலம் வாழப்பாடி சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பத், மேச்சேரி உதவி ஆய்வாளர் சங்கர், சேலம் தலைமைக் காவலர் த.திருமூர்த்தி.

    நடுக்காவிரி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், திருச்சி விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் ஆரோக்கியசாமி, கே.கே.நகர் சிறப்பு உதவி ஆய்வாளர் வின்சன்ட், உறையூர் தலைமைக் காவலர் க. கார்த்திகேயன்.

    திருப்பூர் காமநாயக்கன் பாளையம் காவலர் மின்ஹாஜூதீன், திருப்பூர் ஆயுதப்படை காவலர் வாசு, தச்சம்பட்டு முதல் நிலைக்காவலர் கு. கார்த்திகேயன்.

    ஆழ்வார்குறிச்சி தலைமைக் காவலர் கல்யாண் சுந்தர், பத்தமடை சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, காவலர் சுந்தரபாண்டியன்; போச்சம்பள்ளி காவலர் மாரிமுத்து, சேலையூர் தலைமைக் காவலர் ரமேஷ்.

    புதுப்பேட்டை ஆயுதப்படை, காவலர் திருலோகசந்தர், ஆயுதப்படை காவலர் ரவீந்திரன் மற்றும் கார்த்திக், வடக்கு கடற்கரை காவல் நிலைய முதல் நிலைக் காவலர் பிச்சாண்டி.

    ஈரோடு போக்குவரத்து தலைமைக் காவலர் சு. செந்தில்குமார், கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர் காட்வின் டோனி, மதுரை ஆயுதப்படை பெண் தலைமைக் காவலர் உமா வாசுகி, பெரம்பலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி.

    ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் சிவக்குமார், திருவேகம்பத்தூர் தலைமைக் காவலர் நாகராஜன்.

    அச்சன்புதூர் சிறப்பு உதவி ஆய்வாளர் தம்பிதுரை, நாங்குநேரி காவல் நிலைய காவலர் ஆறுமுகம், விழுப்புரம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 62 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதுடன் 62 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்தை முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தர விட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×