search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம் கலந்த தவிடை தின்று உயிரிழந்த கன்றுக்குட்டிகளை படத்தில் காணலாம்.
    X
    விஷம் கலந்த தவிடை தின்று உயிரிழந்த கன்றுக்குட்டிகளை படத்தில் காணலாம்.

    கோட்டூர் அருகே விஷம் கலந்த தவிடை தின்ற 2 கன்றுக்குட்டிகள் பலி

    கோட்டூர் அருகே விஷம் கலந்த தவிடை தின்ற 2 கன்றுக்குட்டிகள் பரிதாபமாக இறந்தன. இது தொடர்பாக முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோட்டூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள கர்ணாவூர் கிராமத்தில் தற்போது சம்பா அறுவடை பணிகள் முடிந்து விளை நிலங்கள் தரிசாக காட்சியளிக்கிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் கிராம மக்கள் கால்நடைகளை வயல் வெளிகளில் மேய்ப்பது வழக்கம்.

    இந்த நிலையில் அறுவடை செய்யப்பட்ட ஒரு வயலுக்கு கர்ணாவூரை சேர்ந்த கோபால் என்பவரின் ஒரு பசுங்கன்று மற்றும் 2 காளைக்கன்றுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டிருந்தார்.

    மேய்ச்சலுக்கு சென்ற 3 கன்றுகளும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. இதில் 2 காளை கன்றுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன. பசுங்கன்று மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோபால் பசுங்கன்றை மீட்டு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் பசுங்கன்று உயிர் பிழைத்தது.

    கர்ணாவூர் பகுதியில் அறுவடை செய்து வயல்களி்ல் குவி்த்து வைக்கப்பட்டு இருந்த நெல்லை மாடுகள் தின்று சேதப்படுத்தி வந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கீர்த்தி(வயது62) என்பவர் பாத்திரங்களில் விஷம் கலந்த தவிடை நெல் குவியல் அருகே வைத்து உள்ளார். இந்த தவிடை தின்ற 2 கன்றுகளும் உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் கோபால் பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் கீர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×