search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர்

    உடல் நலக்குறைவு, சாலை விபத்துகளில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த ஜீல்பிஹார் மற்றும் சரவணன், புள்ளம்பாடி முத்து கிருஷ்ணன், நவல்பட்டு ஆஷிக்கான், வழுதூர் சிவனேசதுரை, கீரனூர் பழனிவேல், ஈரோடு ராமகிருஷ்ணன், சென்னிமலை தீயணைப்பு நிலையத்தின் அலுவலர் மணி, சத்தியமங்கலம் விஜயகுமார், தாம்பரம் கோபிநாத், செய்யூர் ஜார்ஜ்.

    சென்னை வண்ணையம்பதி தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த பீட்டர், வ.உ.சி. நகர் அன்பழகன், மேலூர் ராஜதுரை, பர்கூர் தங்கவேல், ராஜபாளையம் ராதா கிருஷ்ணன், புகளூர் கதிர்வேல், திருவாரூர் குணசேகரன், திருத்துறைப்பூண்டி அழகுராஜ், வேட்டவலம் குமரேசன், திருவண்ணாமலை அலெக்சாண்டர், ராசிபுரம் பச்சமுத்து, உளுந்தூர்பேட்டை வரதராஜூலு, திருவெண்ணெய்நல்லூர் செல்வம், சுரண்டை செல்வராஜ், கடையநல்லூர் தீயணைப்பு நிலைய டிரைவர் ராஜேந்திரன், சங்ககிரி தீயணைப்பு நிலையத்தின் சுப்பிரமணி, வேலூர் ராஜேந்திரன், காஞ்சிபுரம் தீ தடுப்புக் குழுவில் பணிபுரிந்த கணேசன் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள்.

    கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன், ஏர்வாடி சிவானந்தன், கோவில்பட்டி பொன்ராஜ், ஓட்டப்பிடாரம் மகேந்திரன், நங்கவள்ளி ரமேஷ், பென்னாகரம் அருண், மொடக்குறிச்சி சிலம்பரசன் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×