search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    உயிரிழந்த 64 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டம், இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த அண்ணாதுரை, சென்னை கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜூ, தலைமைக் காவலர்கள் செந்தில்குமார், சுதாகர், மடிப்பாக்கம் தலைமைக் காவலர் ராபர்ட், சென்னை பாதுகாப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அமுதன், புளியந்தோப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் யுவராஜ்.

    ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பரசன், திருமுல்லைவாயல் சட்டம்- ஒழுங்கு பிரிவு புருஷோத்தமன், எஸ்.ஆர்.எம்.சி. போக்குவரத்து தலைமைக் காவலர் அசோக், கோட்டூர்புரம் பெண் தலைமை காவலர் சுதா, ஜெ.ஜெ. நகர் தலைமைக் காவலர் சரவணகுமார், புழல் தலைமைக் காவலர் கலியமூர்த்தி.

    அடையாறு சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ்; சென்னை விமான நிலைய தலைமைக் காவலர் முருகன், தருமபுரி கம்பைநல்லூர் உதவி ஆய்வாளர் இளையராஜா, திண்டுக்கல் சின்னாளபட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன், தாடிக்கொம்பு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜப்பா, கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி தலைமைக் காவலர் சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மத்தூர் தலைமைக் காவலர் சந்திரசேகர், குருபரப்பள்ளி தலைமை காவலர் வேலுமணி.

    மதுரை உயர்நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் உமாசங்கர், கூடல்புதூர் சட்டம்-ஒழுங்குப் பிரிவு முதல் நிலைக் காவலர் துரை, மாநகர ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் மூர்த்தி, மேலவளவு தலைமைக் காவலர் மகாராஜன், மேலூர் காவலர் செந்தில்முருகன், நாகப்பட்டினம் திருக்குவளை சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், நீலகிரி தேவர் சோலை தலைமைக் காவலர் முரளிதரன், புதுக்கோட்டை நாகுடி முதல் நிலைக் காவலர் அண்ணாதுரை, உடையாளிபட்டி உதவி ஆய்வாளர் மேகநாதன்.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் துரை, திருச்சி அரியமங்கலம் சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னாசி, மாநகர ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் குணசேகரன், மாநகர ஆயுதப்படை முதல் நிலை பெண் காவலர் மகேஷ்வரி, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு தலைமைக் காவலர் பாண்டி, திருச்சி சோமரசம்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் ராமதாஸ், தஞ்சாவூர் அம்மாபேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் மும்மூர்த்தி.

    தேனி உத்தமபாளையம் தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு முதல் நிலைக் காவலர் ராஜேஸ்வரன், தருவைகுளம் கடலோர முதல் நிலைக் காவலர் வடிவேலு, திருநெல்வேலி தச்சநல்லூர் உதவி ஆய்வாளர் முருகன், முன்னீர்பள்ளம் தலைமைக் காவலர் ஜெயகுமார், திருப்பத் தூர் காவலர் வெங்கடேசன், திருவண்ணாமலை மங்க லம் உதவி ஆய்வாளர் வெங்கடேசன், விருதுநகர் சேத்தூர் ஊரக காவலர் முருகன், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன், விருதுநகர் அப்பையநாயக்கன்பட்டி காவலர் பாஸ்கரன் ஆகியோர் உடல் நலக் குறைவால் கால மானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    செங்கல்பட்டு சட்ராஸ் தலைமைக் காவலர் தணிகைவேல், மாதவரம் சாலைப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு தலைமைக் காவலர் தேசிங்கு, புனித தோமையர்மலை ஆயுதப் படை காவலர் பிரதாப், தருமபுரி கிருஷ்ணாபுரம் காவலர் ராஜேஷ்கண்ணா, திண்டுக்கல் தனிப்பிரிவு தலைமைக் காவலர் சிவகணேஷ், மதுரை கரிமேடு சட்டம்-ஒழுங்கு தலைமைக் காவலர் செக்கான் கருப்பன், தல்லாகுளம் போக்குவரத்து தலைமைக் காவலர் ஜோதிராம், உசிலம் பட்டி தாலுகா சிறப்பு உதவி ஆய்வாளர் வீரணன், சமயநல்லூர் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன், ஊமச்சிகுளம் தலைமைக் காவலர் அசோக்குமார்.

    சேலம் இரும்பாலை சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ், ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் வரதராஜன், திருச்சி உறையூர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பால சுப்பிரமணியன், திருவண்ணா மலை ஆயுதப் படை காவலர் குணசேகரன், கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தாமோதரன், சிவகாசி தலைமைக் காவலர் மாரிக்கண்ணு மாவட்ட ஆயுதப்படை காவலர் ஜக்கையா ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×