search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்வி கடன் ரத்து- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட காணையில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மனுக்கள் மூலம் மு.க.ஸ்டாலினிடம் குறைகளை தெரிவித்தனர்.

    அதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். நான் முதல்-அமைச்சராக பதவியேற்று 100 நாட்களுக்குள் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கு வந்து என்னை நேரில் சந்திக்கலாம்.

    தி.மு.க. ஆட்சியில்தான் முதன்முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி திருமண உதவி திட்டத்தை கொண்டுவந்தார். இதனை இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினார்கள். தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மாணவர்களின் கல்வி கடன் உடனடியாக ரத்து செய்யப்படும். நான் அறிவித்ததை பார்த்துவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் நினைத்ததைதான் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று கூறி கல்வி கடன்களை ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×